நரம்பு மண்டலம் நோய்

அரும்பு கோணிடில் அதன் மணம் மாறுமோ.

கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்.

இரும்பு கோணிடில் யானையும் வெல்லலாம்.

நரம்பு கோணிடில் நாமென்ன செய்வது?

முல்லையில் அரும்பு  கோணி வளர்ந்தால் உரிய வாசனை உண்டு‌‌.

கரும்பு கோணலாக வளர்ந்தால் கூட அது கரும்பு பாகாய் ஆவது‌ உறுதி.

இரும்பை கோணலாகவளைத்தால் கூட யானையை அடக்கும் அங்குசமாய்‌ ஆக்கிவிடலாம் .

ஆனால் நரம்பு கோணினால் .

அதனால் உண்டாகும் விளைவுகள் உடலை சிதைக்கும் தன்மை கொண்டது .

என்பதை சித்தர்கள் வெகுவாக உணர்ந்து, நரம்பு மண்டலத்தை பலப்படுத்த பலவகையான சித்த மருந்துகளை கண்டறிந்துள்ளனர்கள்.

நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களையும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும் பார்ப்போம்.

நரம்பு குறைபாடுகளை தீர்க்கும் சித்த மருத்துவம்.

நரம்பு மண்டலத்தில் மிக முக்கியமான மூளை தொடர்பான விசயங்களை பார்க்கலாம்.

மூளை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நினைவாற்றல்.

அந்த நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் வல்லாரை என்ற மூலிகையின் மருந்துகளை பற்றி பார்ப்போம்.

வல்லாரைக்கு சரஸ்வதி மூலிகை என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

நரம்பு மண்டலத்தில் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலையின்  ஆசான் வல்லாரை என்றால் அது மிகையல்ல.

மேலும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் சித்த மருந்துகளை பார்ப்போம்.

அகில்
அக்கராகாரம்
கொட்டைக்கரந்தை
அகத்தி
ஆடுதீண்டாப்பாளை
ஆளிவிதை
ஆலம்பட்டை
இலவங்கப்பட்டை
கஸ்தூரி
கருங்காலி
கற்பூரவள்ளி
செம்பருத்தி
தாமரை
நாயுருவி
தான்றிக்காய்
நெருஞ்சில்
வசம்பு
பூனை காலி
அயச்செந்துரம்
அயக்காந்தசெந்துரம்
பவள பஸ்பம்
வெள்ளி பஸ்பம்
கரிசாலை லேகியம்
தேற்றான் கொட்டை லேகியம்

போன்ற என்னற்ற சித்தமருந்துகள் 
சித்தர்களால் படைக்கப்பட்டது..

Comments