நீரிழிவு என்றால் என்ன?
மாவுச்சத்து நம் உடலில் தேவையான அளவு இருந்தும் அதை உடல் ஹார்மோன்கள் நிராகரிக்கும் நிலையே சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது..
நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து மாவுச்சத்து பிரிக்கப்பட்டு ஜீரணத்தின் போது குளுக்கோஸாக மாறி செல்களினூல் செலுத்த பட வேண்டும்..
இச் செயலை செய்ய பயன்படும் ஹார்மோன் தான் இன்சுலின் அப்படி அது சரியாக செலுத்தபடாத நிலையில் மீதமுள்ள குளுக்கோஸ் நம் ரத்தத்தில் கலந்து உலா வரும்.
இதன் அளவு அதிகமாகும் போது சிறுநீர் வழியாக வெளியேற தொடங்கும் இப்படிப்பட்ட கோளாறுகள் நம் உடலில் ஏற்படுவதால் சிறுநீர் போக்கு அதிகமாகி நாக்கு அடிக்கடி வறண்டு தாகம் எடுக்கும் உடலும் சோர்வடைந்து விடும் இதுவே நிரிழிவு..
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்..
1, உடல் சோர்வு
2, உடலில் ஏற்படும் காயம் புண்
குணமாவதில் தாமதம்
3, அகோர பசி எடுத்தால், அகோர தாகம் எடுத்தால்
4, திடிரென எடை கூடுதல் அல்லது குறைதல்
5, உடலுறவில் ஆர்வம் குறைதல்
6, பிறப்புறுப்பு பகுதியில் உண்டாகும் புண்
7, அடிக்கடி சிறுநீர் கழித்தல்
8,தலை சுற்றல் பாத எரிச்சல்
9, பெண்களுக்கு அதிக வெள்ளை படுதல்
10, அடிக்கடி தோல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்படுதல்
11, கண் பார்வை மங்குதல்
மேற்கண்ட பிரச்சினைகள் யாவும் ஒரு நீரிழிவு நோயாளிகளுக்கு இருந்தே ஆகவேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை.
இவைகளில் சில மற்றும் பல அவரவர் உடல்நிலை பொருத்து காணப்படும்..
மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு ஏற்பட்டு சந்தேகம் எழுமானால் பரிசோதிக்க தயங்காதீர்கள்..
நீரிழிவினால் ஏற்படும் சிக்கல் என்னனென்ன?
நீரிழிவை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாமல் விட்டால் சில வருடங்களுக்குள் நம் உடலில் இரத்த குழாய் மற்றும் சிறுநீரகம் மேலும் நரம்புமண்டலம் என பாதிப்பை ஏற்படுத்தும்..
நரம்பு சேதம்
80 சதவீதம் நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்..
நரம்பு சேதம் காரணமாக மயக்கம், வாந்தி,உணர்விழப்பு,தசை பலவீனம்,வயிற்று போக்கு, சிறுநீர் பையில் அடிக்கடி நோய் தொற்று ஏற்படுதல், உடலில் ஊசியால் குத்துவது போல உணர்வு ஆண்மை குறைவு போன்றவற்றை உண்டாக்கும்..
கண் பாதிப்பு...
Comments
Post a Comment